ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழ்பாணத்தின் 64 கழகங்கள் பங்குகொள்ளும் உதைபந்துப்போட்டியின் இன்றைய 3 ஆவது சுற்றில் வதிரி டையமன்ஷை எதிர்கொண்ட வல்வை அணி போட்டியில் வெற்றியீட்டி கால் இறுதிக்குத் தெரிவாகியுள்ளது.
ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் தண்ட உதையில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய வல்வை அணி முதலாவது கோலினைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வல்வை அணியின் சண்முகதாஸ் மேலும் ஒரு கோலினை வல்வை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.
இடைவேளைக்குப் பின்னர் சுதாரித்துக் கொண்ட வதிரி அணி 2 கோல்களை எடுத்து ஆட்டத்தைச் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற தண்ட உதையில் வல்வை அணி 5 : 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
தற்பொழுது 4 ஆவது சுற்றுக்குத் தெரிவாகியுள்ள 8 கழகங்களில் வல்வை விளையாட்டுக் கழகமும் ஒன்றாகும். இதில் வடமராட்சிப் பிரதேசத்திலிருந்து தெரிவாகியுள்ள ஒரே ஒரு அணி, வல்வை அணி என்பது குறிப்பிடத்தக்கது.