ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பிராந்திய வலய நாடுகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்தியாவின் பங்களிப்பு குறித்து பான் கீன் மூன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், மாலைதீவு உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளின் பிரச்சினைகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன், பான் கீ மூன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் பணிகளில் இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.