ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் சம்பந்தன் கைகுலுக்கும் படம்
வடமாகாண சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றியீட்டியதையடுத்து இருவருக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பின் போது வடமாகாண அமைச்சரவை பதவியேற்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக கூறுப்படுகிறது.
காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் இந்த தீர்ப்பு தொடர்பில் தான் ஆராய்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது மாகாண சபைக்கான காணி அதிகாரம் குறித்தும் சம்பந்தன் எடுத்துரைத்தார் எனத் தெரியவருகிறது.
சந்திப்பின் போது கலந்து கொண்டவர்கள் குறித்த விபரங்கள் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.