இந்தோனேஷியாவை சேர்ந்த பெண் ஒருவர் முகத்தில் தாடியுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்.
இந்தோனேஷியாவின் பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா(வயது 38). இவருக்கு 19 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு 25 வயதாக இருக்கும் போது முதல் குழந்தை பிறந்தது, அதன் பின் இவரது முகத்தில் திடீரென முடி முளைக்க ஆரம்பித்தது.
இந்த தாடியை அகற்ற முற்பட்ட போது, கடுமையான வலியினால் அப்படியே விட்டுவிட்டாராம்.
இதனால் கடந்த 19 ஆண்டுகளாகவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகத்தை மறைத்தவாறு சென்று வருவதாகவும்; வீட்டிற்குள்ளும் தன்னுடைய குழந்தைகள் பரிகாசம் செய்வார்கள் என்ற பயத்தில் முகத்தை மறைத்தே வாழ்ந்து வருவதாகவும் அகஸ்டினா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வாரத் துவக்கத்தில் முதன் முதலாக முகத்தை மறைக்காமல் வெளியே வந்தபோது, மக்கள் விசித்திரமாக பார்த்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.