Search

இறையாண்மை வழக்கு – சீமான் விடுதலை!

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி சீமான் மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கில், அவர் நிரபராதி என தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டார்.

இலங்கை இறுதி கட்ட போர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் போராட்டங்கள் நடந்தன. அப்போது புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது புதுவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

புதுவை சிறையில் 80 நாட்கள் அடைக்கப்பட்டார் சீமான். அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தால் வெளியில் வந்தார்.

இந்த வழக்கு புதுவை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி இன்று சீமானை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில், “சீமான் இந்தியா இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. இலங்கைக்கு எதிராகதான் பேசி இருக்கிறார். இது உணர்வுப்பூர்வமான பேச்சு. எனவே அவரை விடுதலை செய்கிறேன்,” என்றார்.

தீர்ப்பையொட்டி சீமான் இன்று புதுவை கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவர் நிரபராதி என தீர்ப்பு வந்ததும் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *