இரண்டாம் உலகப் போரின் போது ரகசிய இடத்தில் புதைத்து வைக்கப்பட்ட புதையலை கண்டுபிடித்து விட்டதாக லியோன் கெய்சன் என்பவர் கூறியுள்ளார்.
ஜேர்மனியில் எதிரிகளிடமிருந்து கொள்ளையடித்து பணம், தங்கம் மற்றும் வைரம் போன்றவற்றை நாஜி படைகள் ரகசிய இடத்தில் புதைத்து வைத்தன.
இவை பல கோடி டொலர்கள் மதிப்புள்ளவை என்பதால், இதனை தோண்டி எடுக்கும் வேலையில் கும்பலொன்று இறங்கியது.
இந்நிலையில் புதையலை கண்டுபிடித்து விட்டதாக லியோன் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிறு சிறு புதையல்களை கண்டறிந்த லியோன் கையில் மேப்(Musical Notes) ஒன்று கிடைத்தது.
இதனை மியூசிக் தெரிந்த தனது நண்பரிடம் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அதிலிருந்த மேத்யூ என்ற பெயரை வைத்து, அவர் வாழ்ந்த ஊரான மிட்டர்வால்டு என்ற நகரை கண்டுபிடித்தார்.
அதன்பிறகு, எம் என்ற எழுத்து அதில் இருந்தது. பெர்லின் ரயில்வே ஸ்டேஷனில் எம் எழுத்தை ஒரு போட்டோவில் பார்த்தார்.
அதன்பிறகு ரயில்வே ரூட்களை ஆய்வு செய்தார். அமெரிக்க படைகள் ஜேர்மனியில் விமானத் தாக்குதல் நடத்தியபோது, எடுத்த போட்டோக்கள் அனைத்தையும் பார்த்தார்.
மிட்டர்வால்டு நகரில்தான் புதையல் இருக்கும் என்று கணித்தார். இதற்கிடையில் புதையலை எடுக்க பணம் தேவைப்பட்டது.
மேப்பை 700 காப்பி எடுத்து, காப்பி 65 டாலர் என விற்று நிதி திரட்டினார். ஒரு காலத்தில் காடாக இருந்த அந்த இடம் இப்போது நகரின் முக்கியப் பகுதி.
அங்கு 3 இடத்தில் போர்வெல் மூலம் குழி தோண்ட அனுமதி வாங்கினார்.
நவீன கருவிகள் மூலம் ஆய்வு நடத்தியதில் பூமிக்குள் வழக்கமாக இருப்பதை விட மாறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தங்கம் வைரமும் பெட்டி பெட்டியாக பதுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அந்தப் பகுதியில் கண்ணி வெடிகளும் வைக்கப்பட்டிருக்கும்.
எனவே அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும்தான் குழி தோண்டப்படும் என தெரிவித்துள்ளார் கெய்சன்.
ஆனால் 15 ஆண்டுகளாக மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடி வரும் புரோஸ்கே என்பவர் புதையல் இங்கு இருக்க வாய்ப்பில்லை எனக் கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த புதையலை ஹிட்லரின் தளபதியான ஹெயின்ரிச் ஹிம்லர், தெற்கு ஜேர்மனியின் பவேரியாவில் உள்ள காட்டுப் பகுதியில் பதுக்கியதாக கூறப்படுகிறது.
இப்படி பதுக்கிய புதையல் குறித்த ரகசிய குறிப்புகளை ஹிட்லரின் செயலாளராக இருந்த மார்ட்டின் போர்மன், யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக மியூசிக்கல் நோட்ஸ்-ஆக(Musical Notes) வைத்திருந்தார்.
இதற்கிடையே, புதையல் இடத்தைக் குறிக்கும் குறிப்புகள் ஆங்கில வார்த்தைகளில் சந்தேகமாக குறிப்பிட்டிருக்கும்.
2ம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான படைகள் நடத்திய அதிரடி சோதனைகளில் அரசு ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன.
அதில் புதையல் மேப்பும் சிக்கியது, ஆனால் இதன் மூலம் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கார்ல் ஹாமெர் என்ற பத்திரிகையாளர் கையில் இது கிடைத்தது. ஆனால் புதையலை கண்டுபிடிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன அவர் இந்த மேப் குறித்த விவரத்தை எல்லோருக்கும் தெரிவித்து விட்டு ஒதுங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது