மாணவிகள் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கி.மீ தொலைவில் உள்ள கசோபோவார் நகர பல்கலைகழக மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதாவது, அக்டோபர் 1ம் திகதி முதல் வகுப்பறைகளுக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட், டீ ஷர்ட் அணிய கூடாது, அதிக மேக் அப் போட்டு கொள்ள கூடாது உள்பட பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது பேராசிரியை தலைமையில் நிர்வாணமாக வந்து பாடம் படித்தனர்.
நிர்வாகம் தனது விதிகளை தளர்த்தும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இத்தகவல் உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியானதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.