நடந்து முடிநந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அமைச்சுப் பதவிகளை பங்கிடுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலமை காணப்பட்டது.
பல நாட்கள் பல தடவைகள் நடந்த கலந்துரையாடல்களைத் தொடந்து அமைச்சுப் பதவிகள் யார் யாருக்கென தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.
கூட்டமைப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் மாகாண அமைச்சுகள் வழங்கப்படவுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
பொ. ஐங்கரநேசன் – விவசாயம், கால்நடை, நன்னீர் மீன்பிடித்துறை
பா. டெனிஸ்வரன் – உள்ளுராட்சி நிர்வாகம்
த. குருகுலராஜா – கல்வியமைச்சு
வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் – சுகாதாரம்