வடக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவிற்கு விளக்கம் அளித்துள்ளது. நேற்றைய தினம் மாலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை , கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சிவிலியன் சொத்துக்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் வடக்கு காணிப் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கம் அளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு நடாத்துவதற்கு முன்னதாக, குர்ஷித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.