எங்கள் சிதம்பரா எமது வல்வையர் வாழ்வில் நாம் தாய்க்கு அடுத்தபடியாக வணங்கும் கல்வித்தாய். வல்வையர் வரலாற்றை நூறு வருடங்குளுக்கு மேலாக தன்னகத்தே கொண்டது. இக்கல்வித்தாயின் மடியில் வாழ்ந்து நாம் பெற்றவை அளப்பரியது.
இன்று சிதம்hராக்கல்லூரி நிர்கதியான நிலையில் அனாதரவாக பழைய பொலிவையிழந்து அதன் பெருமைகளை இழந்து வல்வையர்கள் வருந்தி வெட்கம் அடையும் நிலைமையில் இருக்கின்றது.
எமது சிதம்பராவுக்கு தற்போது அரசாங்கத்தாலோ அதன் தொடர்புடைய கல்வித்திணைக்களத்தாலோ அரசியல்வாதிகள் நகராட்சி சபை புலம்பெயர் வல்வையர் அமைப்புக்கள் எதனாலும் எந்த உதவியும் சேருவதில்லை. அத்துடன் நகர அபிவிருத்தி என்பதன் மூலம் கல்லூரியின் முன்பகுதியும் கிணறுகள் போன்ற வற்றை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாம் நூறு வருடங்களுக்கு மேலாகப்பாடும் கல்லூரியின் கீதத்தில் வரும் விஞ்ஞான வளர்ச்சி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
நாட்டின் அரசியல் காரணமாக செய்யப்படும் உதவிகளும் வீணடிக்கப்படுகிறது.
தற்போது எங்கள் வல்வை மாணவர்கள் உயர்தர விஞ்ஞான கல்விக்கு வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எங்கள் வல்வை மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஊட்ட அதன் பலனை எடுத்துச் சொல்ல அங்கு எவருமே முன் வருகிறார்கள் இல்லை.
வல்வையராகி நாம் எம் ஊர் மண்ணின் கௌரவத்தையும் எம் வாழ்வியல் முறைகளையும் பின்னோக்கி செல்ல விட்டதில்லை.
இதன் காரணமாக நாங்கள் நாளைய உலகின் எதிர் பார்புக்களை நோக்கி எம் வருங்கால வல்வைப் பரம்பரையின் மாணவச் செல்வங்களை எடுத்துச் செல்ல வேண்டிய கடமைப்பாடு சிதம்பராவின் பழைய மாணவர்களாகி எங்களுக்கு இருக்கிறது.
இதன் பொருட்டு இங்கிலாந்தில் வாழும் சிதம்பராவின் பழைய மாணவர்கள் பழையமாணவர் சங்கம் அமைத்து அதனை பாடசாலைக்கு மட்டும் பயன் படுத்தும் உதவி நிறுவனமாக பதிவுகளை மேற்கொண்டு சிதம்பராவின் தரத்தை மீண்டும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர முயற்சிப்போம்.
சென்ற மாதம் மூன்று வார விடுமுறையில் ஊர் சென்ற திரு சுவாமி.இராஜேந்திரா மாஸ்டர் அவர்கள் சிதம்பராவின் முன்னேற்றத்திற்காக அங்கு உடனடி உதவிகளை செய்து வல்வை பெற்றோர்கள் கொழும்பு பழைய மாணவர்கள் சங்த்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளார். இவர்களின் ஆலோசனையின் படி இங்கிலாந்தில் காலதாமதம் ஏற்படாமல் பூரணத்துவமான யாப்புடன் சிதம்பராவின் பழைய மாணவர்கள் அமைப்யை நிறுவ வேண்டிய காலகட்டத்தில் வல்வை மக்களாகிய நாங்கள் நிற்கின்றோம்.
வெகு விரைவில் வல்வை சிதம்பராவின் பழையவர்கள் மாணவர்கள் ஆகிய நாம் ஒரு சந்திப்பை மேற்கொள்ள உள்ளதை பணிவுடன் அறியத்தருவதோடு உங்களின் ஆத்மா பூர்வமான ஆதரவையும் பங்களிப்பையும் வேண்டி நிற்கிறேம்.
பணிவுடன்.
சுவாமி இராஜேந்திரா மாஸ்டர்
கைபேசி;;– 0789 154 77 87 begin_of_the_skype_highlighting 0789 154 77 87 end_of_the_skype_highlighting
இமெயில்;–
பொன். தேவராஜா— 078 781 36 709
வாசு.நேரு————— 078 86 40 29 31 begin_of_the_skype_highlighting 078 86 40 29 31 end_of_the_skype_highlighting
இர.தங்கவேல்——-07904440345
சோ.செ.தெய்வச்சந்திரன்-07 077 464 887