மால்ட்டா நாட்டுக்கும் இத்தாலியின் சிசிலி தீவுக்கும் இடையே கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து மால்ட்டா கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
“சுமார் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு சிசிலி அருகே கடலில் கவிழ்ந்தது. மால்டாவில் இருந்து 130 கி.மீ. தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துப் பகுதிக்கு மீட்புப் படகுகளும் ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடுமையான காற்று வீசி வருவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
இந்த விபத்தை இத்தாலி நாட்டின் கடலோர காவல்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.