புற்றுநோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்

புற்றுநோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்

புற்றுநோயை எதிர்த்து போராடுவது கஷ்டம் தான் என்றாலும், சில உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

முக்கியமாக சில மசாலா பொருட்கள், நம் உடலில் பரவி புற்றுநோய் செல்களை அழிக்கும்.

மஞ்சள்

புற்றுநோய் எதிர்ப்பு குணங்களை மஞ்சள் கொண்டுள்ளதால், அதனை மசாலாப் பொருட்களின் அரசனாக பார்க்கப்படுகிறது.

இது போக நம் உணவிற்கு நிறத்தை சேர்க்கவும் இது பயன்படுகிறது.

மஞ்சளில் சக்தி வாய்ந்த பாலிஃபீனால் குர்குமின் உள்ளது. இது புற்றுநோய், மெலனோமா, மார்பக புற்றுநோய், மூளை கட்டி, கணையம் புற்றுநோய், வெள்ளையணுப் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்களை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

குர்குமின் என்னும் பொருள் அணு தற்கொலையை மேம்படுத்தும். அதனால் இது மற்ற ஆரோக்கியமான அணுக்களை எந்த விதத்திலும் பாதிக்காமல், புற்றுநோய் அணுக்கள் பரவுவதை தடுக்கும்.

ஆனால் பொதுவாக அளிக்கப்படும் புற்றுநோய் சிகிச்சைகளான கதிர்வீச்சு மற்றும் ஹீமோ தெரப்பியால் புற்றுநோய் அணுக்களுக்கு அருகில் இருக்கும் ஆரோக்கியமான அணுக்களும் பாதிக்கப்படும். இதன் பக்க விளைவுகள் உடனுக்குடன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குங்குமப்பூ

குங்குமப்பூவில் க்ரோசெட்டின் என்ற இயற்கை கரோட்டினாய்டு டைகார்போக்ஸில் அமிலம் உள்ளது. இது புற்றுநோய்க்கு எதிராக போராடும் முதன்மையான பொருளாகும்.

இது நோயின் வளர்ச்சியை மட்டும் தடுக்காமல், கட்டியின் அளவையும் பாதியாக குறைத்துவிடும். அதனால் புற்றுநோய்க்கு நிரந்தரமாக குட்-பை சொல்லலாம்.

இதனை தயார் செய்ய 2,50,000 சாப்ரன் க்ரோசஸ் பூக்களின் சூல்முடிகள் தேவைப்படும். இவ்வளவு சூல்முடிகள் சேர்த்தாலும் கூட, அது வெறும் அரை கிலோவை தாண்டாது.

அதனால் உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த மசாலா பொருளாக இருந்தாலும் கூட, இதன் மருத்துவ குணங்களுக்காக இதனை விலை கொடுத்து வாங்குவது தவறில்லை.

சீரகம்

ஆம், செரிமானத்திற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது சீரகம். அதனால் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு கை சீரகத்தை மெல்ல விரும்புவோம்.

இருப்பினும், அதில் அதையும் தாண்டி பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது.

சீரகத்தில் தைமோக்வினோன் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது புற்றுநோய்க்கு காரணமான அணுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும்.

அதனால் எண்ணெய் மற்றும் கலோரிகள் அதிகமுள்ள நொறுக்குத் தீனிகளை உண்ணுவதற்கு பதில் சீரகம் சேர்த்த ரொட்டி, பீன்ஸ் அல்லது சாஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

சுவைமிக்க ஆரோக்கியமான இந்த உணவுகளை உண்ணுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம். சாதத்தில் பருப்பு ஊற்றி உண்ணுவதால், பருப்பில் கூட சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கற்பூரவள்ளி

பிட்சா அல்லது பாஸ்தாவை விட அதன் மேல் தூவும் கற்பூரவள்ளி மிகவும் ஆரோக்கியமானதாகும், முக்கியமாக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.

கிருமிநாசினி சேர்க்கை கூட்டுகளை இது கொண்டுள்ளதால், ஒரு டீஸ்பூன் கற்பூரவள்ளி இரண்டு கப் திராட்சைக்கு சமமாகும்.

க்யூயர்சிடின் என்ற பைட்டோ இரசாயனம் இதில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் புற்று அணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். அதனால் புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக செயல்படும்.

குடைமிளகாய்

புற்றுநோய்க்கு எதிரான குணங்களை கொண்டுள்ள மசாலாவாக விளங்குகிறது குடைமிளகாய். ஆனால் அதனை அதிகமாக உட்கொள்ள கூடாது.

இது அபோப்டோசிஸ் செயல்முறையை தூண்டுவதால் புற்று அணுக்களை அழித்து, மூளையில் உள்ள கட்டியின் அளவை குறைக்கும். மேலும் இது புற்றுநோயை அழிக்கவும் பெரிதளவில் உதவி புரியும்.

இஞ்சி

இந்த எளிமையான மசாலாவில் உள்ள பல மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க, மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க மற்றும் புற்று அணுக்களை அழிக்க உதவும்.

இதனை சமைக்கும் போது காய்கறிகள், மீன்கள் மற்றும் சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையையும் அதிகரிக்கும்.

இதன் சுவை பிடிக்கவில்லை என்றால் வேர்க்கோசுவுடன் சேர்த்து அதனை மெல்லுங்கள்.

இதர பொருட்கள்

கிராம்பு, சோம்பு, துளசி, பூண்டு, சீமைச்சோம்பு, வெந்தயம், கடுகு, புதினா இலைகள், ரோஸ்மேரி இலை, நற்பதமான எலுமிச்சை, வெர்ஜின் ஆலிவ் மற்றும் அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் ஆகியவைகளும் புற்று அணுக்களுக்கு எதிராக போராடும்.

நார்ச்சத்து தேவை

தினமும் வெள்ளை நிற சாதத்திற்கு பதிலாக பழுப்பு நிற அரிசியை உண்ணுங்கள்.

கோதுமை பிரட்

வெள்ளை நிற பிரட்டிற்கு பதிலாக முழு தானிய பிரட்டை உண்ணுங்கள்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ் நேரத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் உண்ணுவதற்கு பதிலாக பாப்கார்ன் உண்ணுங்கள்.

மீன்கள்

ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இது அழற்சிக்கு எதிராக போராடும். எனவே மீன், மீன் மாத்திரை போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

எப்போதும் பதப்படுத்தப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட உணவுகளையும் காய்ந்த உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.

குறிப்பு

புற்று நோயாளிகள் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல், மஞ்சள் கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.