மனித உரிம மீறல்களில் ஈடுபடவில்லை என கண் மூடித்தனமாக மறுப்பதில் எவ்வித பயனும் கிடையாது என நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.