அரபாத்தின் உடையில் விஷ தடயங்கள்! பரபரப்பான தகவல் வெளியானது

அரபாத்தின் உடையில் விஷ தடயங்கள்! பரபரப்பான தகவல் வெளியானது

பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் அணிந்திருந்த உடையில் விஷத்தின் தடயங்கள் இருந்ததை சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

பாலஸ்தீன விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அரபாத்.

இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அரபாத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரீசுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி பாரீஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.

இவரது மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையிலும், கோமா நிலையில் இறந்ததால் பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே அரபாத் இறக்கும் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்கள், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டனர்.

அதில், இறக்கும் போது அவரது உடலில் கொடிய விஷமான பொலொனியம் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனை செய்ய பாலஸ்தீன நிர்வாகமும், அரபாத்தின் மனைவி சுகாவும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின லூசானே பல்கலைக்கழக கதிர்வீச்சு துறை நிபுணர்கள் கடந்தாண்டு நவம்பர் மாதம், ரமலாவுக்கு சென்று அவரின் உடலை வெளியே எடுத்து பரிசோதித்தனர்.

சமாதியில் சில எலும்புகளையும், துணி இழைகளையும் சேகரித்தனர். இந்த ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதில், அரபாத் கடைசி நேரத்தில் அணிந்திருந்த உடைகளை அவரது மனைவி சுகா ஆய்வுக்காக அளித்திருந்தார்.

புளுடோனியம்-210 இந்த உடை மற்றும் அவரது உடல் ஆகியவற்றிலிருந்து 75 சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன.

அவரது உள்ளாடை, டூத் பிரஷ், தொப்பி, உள்ளிட்டவைகளில் மேற்கொண்ட ஆய்வில் புளுடோனியம்-210 ரசாயனம் இருந்ததற்கான தடயங்கள் இருந்தன.

இதன் மூலம் அவருக்கு இந்த விஷம் செலுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.