தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த எத்தனிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வடக்கு விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் வெற்றியானது பிரிவினைவாதத்திற்கான அங்கீகாரமாக சிலர் கருதிச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை துண்டாட முயற்சிப்போரின் தலை உடலில் இருக்காது என இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என்ன விலை கொடுத்தேனும் நாட்டின் சமாதானத்தை பேணிப் பாதுகாக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய ஆதரவாளர்களும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்டமைப்பில் நாட்டின் எந்தவொரு பிரஜையும் வாழ்வதற்கு எவ்வித தடையும் கிடையாது, எனவும் வன்முறைகளைத் தூண்டும் நோக்கில் செயற்படுவோருக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் தேர்தல் வெற்றியானது தனிப்பட்ட ஒர் கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல, அது தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளா