யாழ்அரசஅதிபர் தான் ஒரு அரசாங்கத்தின் ஊழியர் என்ற நிலையில் இருந்து மிகவும் கீழிறங்கி சிங்களபடைகளின் பேச்சாளர்போலவும் தமிழ்இனஅழிப்பை நியாயப்படுத்தும் ஈனப்பிறவியாகவும் நடந்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் அவரின் இன்னொரு நடவடிக்கைதான் சிங்களமொழி கட்டாயபாடமாக்கும் திட்டம்.
இலங்கை அரசாங்கத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மும்மொழி கொள்கைத் திட்டத்தின் ஊடாக, வட தமிழீழத்தில் தமிழ் மாணவர்களுக்கு, சிங்கள மொழியினைக் கட்டாயப்பாடமாக்க, இலங்கை அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.தமிழர் தாயகத்தினை ஆக்கிரத்து நிற்கின்ற சிங்கள ஆட்சியாளர்கள், தமிழர் நிலங்களில் பௌத்தமயமாக்கலை, இராணுவமயமாக்கலை ,தீவிரப்படுத்தி வரும் நிலையில், தற்போது சிங்களமயமாக்கலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் முதற்கட்டமாக வடமாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களில் மும்மொழி பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என இலங்கை அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக இந்தத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள 12 கல்வி பணிப்பாளர்களின் அலுவலகங்களுடன் இணைந்ததாக இந்த மும்மொழி பயிற்சி நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளையும் கொண்டதாக அமையவுள்ள இந்த பயிற்சி நிலையங்களின் மூலம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மும்மொழி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.