அமைச்சரவைக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரை பங்கேற்கச் செய்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சியினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:- அமைச்சரவை கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரை கலந்து கொள் ளச் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சியானது தங்கள் ஒற்றையாட்சி சிந்தனையை ஏனைய தேசிய இனங்கள் மீதும் திணிக்கும் முயற்சியாகும்.
ஜனநாயகப் பண்புகளுக்கு மக்களாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி மதிப்பளிப்பது அவசியம். மக்கள் ஒரு முகமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். இதனை உணர்ந்து அரசாங்கம் அரசியல் தீர்வுக்கு இடமளிக்கவேண்டும்.
வடமாகாணசபைக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசி ஒன்றுபட்டு செயற்பட நாம் சித்தமாகவே உள்ளோம். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்க்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நட வடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
வெறுமனே தங்கள் கருத்துக்களையும் அதிகாரத்தையும் வடமாகாணசபையில் திணிப்பதற்கு அரசாங்கம் முனையக்கூடாது.