TNA பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை- ஏனைய மாநில முதலமைச்சர்களையும் சந்திக்க உள்ளது:

TNA பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை- ஏனைய மாநில முதலமைச்சர்களையும் சந்திக்க உள்ளது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய பாரதீய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கையை இந்தியா வலிறுயுத்த வேண்டுமென கோரியுள்ளது.

நீதியை மட்டுமே தாம் வேண்டி நிற்பதாகவும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதாகவும், தமிழக கட்சிகள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் எதனையும் குறிப்பிடப் போவதில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து மத்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமெனக் கூறிய சம்பந்தன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மகாநாட்டில் கலந்துகொள்வதனை இலங்கைவாழ் தமிழ் மக்கள் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக முக்கியஸ்த்தர்களின் விசேட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள இரா. சம்பந்தன் ஏனைய மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களையும் சந்தித்து இலங்கையின் அரசியல் நிலவரங்கள், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த விடயங்களை விளக்க உள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.