வீடியோ காட்சிகள் தொடர்பாக பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் தனது விதிகளை மீண்டும் மாற்றிக்கொண்டுள்ளது.
பெண் ஒருவரின் தலை தூண்டிக்கப்படுவது போன்ற காட்சியை குறித்த இணையத்தளம் நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலை துண்டுக்கப்படும் காட்சி உள்ளிட்ட மோசமான வன்முறைகளை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளை வெளியிடுவதற்கும் அவற்றை பகிர்ந்து கொள்வதற்கும் மீண்டும் அனுமதிக்கும் விதத்தில் குறித்த இணையத்தளம் தனது விதிகளை இரண்டு நாட்களுக்கு முன்னர் மாற்றியிருந்தது.
நீண்டகால உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என முறைப்பாடுகள் செய்யப்பட்டதை அடுத்து கடந்த மே மாதம் இவ்வாறான வீடியோ காட்சிகளுக்கு பேஸ்புக் தற்காலிக தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.