வெள்ளை கொடியுடன் வந்த மக்களை இராணுவம் சுடவே இல்லை- இமெல்டா சுகுமார்

முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் மனிதகுலமே உறையும்விதத்தில் தமிழ்குழந்தைகள்,பெண்கள்,முதியோர்
என்று ஒரு பெரிய இனப்படுகொலையை நடாத்திய சிங்கள இராணுவத்துக்கு ஆதரவாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக யாழ்அரச அதிபர் இமெல்டா சுகுமார் அளித்த பேட்டியை ஒரு கணம் கேளுங்கள்.
யாழ். அரச அதிபர் அதனையும் மீறி மக்கள் வெள்ளைக் கொடி ஏந்தியவாறு இராணுவத்தினரின் பகுதிக்குத் தப்பி வந்தார்களென்றும் குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடியுடன் தப்பி வந்த மக்கள் எவரையும் இராணுவம் சுடவில்லையென்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ‘வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் தப்பி வந்த அனைவரும் இன்னமும் உயிருடன் வாழ்கிறார்கள்.

வேண்டுமானால் அவர்களுள் சிலரை ஆணைக்குழு முன்னிலையில் கொண்டு வந்து சாட்சியமளிக்கவும் இயலும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரச அதிபருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்

எமது மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதிகேட்டு எங்கோ இருக்கும் செனல்4 உட்பட உலகத்தின் மனச்சாட்சி உள்ள அமைப்புகள் மனிதர்கள் எல்லோரும் குரல்கொடுக்கும்போது சிங்கள இராணுஅதிகாரிகளுடன் விருந்துகளில் பங்குகொண்டு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் இந்த
அரசஅதிபரையும் அழைத்து கௌரவம் செய்ய நினைக்கும் தமிழர்கள் இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்.?
இமெல்டா சுகுமார் தான் ஒரு அரசஊழியர் என்ற நிலையில் இருந்து மாறி இப்போது சிங்களஅரசாங்கம் செய்யும் ஆட்கடத்தல்கள்,பாலியல்படுகொலைகள்,கொலைகள் என்பனவற்றை நியாயப்படுத்தும் ஒருவராக மாறி இருக்கிறார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ் இணுவில் பகுதியில் பதினைந்துவயதே ஆன ஒரு மாணவி வெட்டுக்காயங்களுடன் சடலாக மீட்கப்பட்டதும்,யாழ் அச்சேழு பகுதியில் அடித்த பின்னர் தூக்கில் இடப்பட்ட ஒரு பெண்சடலமாக தொங்கியதும் இமெல்டா சுகுமாரின் ஆதரவுடன் நடைபெறும் படுகொலைகள்தான்.
இமெல்டா சுகுமாருக்கு மாலை மரியாதை செலுத்தும்போது இத்தகைய படுகொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் ஆளான அப்பாவி பெண்களுக்கும் நாம் என்ன சொல்ல போகின்றோம் என்பதுதான் வரலாற்றின் கேள்வி

Leave a Reply

Your email address will not be published.