புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கனடியத் தமிழருக்கு அமெரிக்காவில் 2வருட சிறைத்தண்டனை!

அமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள வோட்டர்லூ சுரேஸ் என்று அழைக்கப்படும் 33 வயதான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வோட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா 2006 ஆம் ஆண்டு கனடாவில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

சுரேஸஜ ஸ்ரீஸ்கந்தராசாவும் மேலும் மூவரும் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்தனர் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவினர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சுரேஸ் அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு 2012ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

இதன்போது தாம் விடுதலைப் புலிகளுக்காக வானூதி உபகரணகள், நீர்மூழ்கி கப்பல்கள், இரவு நேர வெளிச்சம் பாய்ச்சி மற்றும் தொலைத்தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் உதவியதாக சுரேஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

Waterloo Suresh என்று அழைக்கப்படும் கனடிய தமிழர், விடுதலைப் புலிகளுக்கு இராணுவ மென்பொருட்களை வாங்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 2006 ஆகட்ஸ் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டு 6 வருட சட்ட போராட்டங்களின் பின் கடந்த டிசம்பர் மாசம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

அவருக்கு நேற்று New York நீதி மன்றத்தில் 2 வருட சிறைத்தண்டனை வழங தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரச சட்டத்தரணிகள் அவருக்கு அதிகபட்ச தண்டனையான 15 வருடங்களை வழங்குமாறு கேட்டிருந்தனர்.

சுரேஸ் அவர்களின் சட்டத்தரணி அவருக்கு ஆதராவதாக பல அரச, சமூக, தொழில் துறை சார்ந்த புத்திஜீவிகளின் ஆதரவு கடிதங்களையும் மேற்கோள் காட்டி குறிப்பாக Craig Scott என்ற கனடிய M.P சுரேஸை கனடிய தமிழர்களுக்கும் மற்றும் கனடிய குடியேற்ற வாசிகளுக்கும் இவர் ஓர் முன்னுதாரணமானவர் என்றும், மற்றும் கல்வியிலும் Engineering, Business Studies, மற்றும் Arts துறைகளில் மிகத் திறமையானவர் என்றும் பின்பு சட்டத்துறை படிப்பினையும் மேற்கொண்டிருந்தார் என்று அவர் அக்கடித்தத்தில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு அமெரிக்காவில் சிறையிலிருந்த நிலையிலும் அங்கு கைதிகளுக்கு கல்வி கற்பித்தலில் மிகச் சிறப்பாக செயலாற்றினார். இது போன்ற செயல்களால் மற்றவர்களுக்கு எப்போதும் உதவும் மிகச்சிறப்பான மனமுடையவர் என்றும் கூறப்பட்டது.

இவரின் தண்டனைக் காலம் இதுவரை கனடாவிலும் அமெரிக்காவிலும் சிறையிலிருந்த காலங்கள் கணக்கில் எடுக்கப்படும் என அறியப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.