வடமேற்கு ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வந்த பெரும் புயல் மணிக்கு 191 கி.மீட்டர் வேகத்தில் இன்று அதிகாலை வட கடல் பகுதியை தாக்கியது.
இந்த புயலின் தாக்குதலுக்கு ஜெர்மனி நாட்டில் 6 பேர், பிரான்சில் ஒரு பெண், டச்சு நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு பெண், தெற்கு இங்கிலாந்தில் 2 பேர், லண்டனில் 3 பேர் என 13 பேர் பலியாகியுள்ளனர்.
புயலின் எதிரொலியாக லண்டன், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் 6 லட்சம் வீடுகளும் பிரான்சில் 42 ஆயிரம் வீடுகளும் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. லண்டன் மற்றும் ஜெர்மனியின் பல பகுதிகளில் ரெயில் சேவையும் தடைபட்டுள்ளது.
ஜெர்மனி வின்வெளி ஆய்வு மையம் இந்த புயலின் வேகத்தை மணிக்கு 191 கி.மீட்டராகவும், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் 162 கி.மீட்டராகவும் பதிவு செய்துள்ளன.