பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரை முடிவு எதனையும் தாம் எடுத்திருக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதரை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களிடையே பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முதலில் குறித்த மாநாட்டில் பங்கு பற்றுவதற்கான அழைப்பு வரட்டும். அதன் பின்னர் போவதா இல்லையாவென முடிவு எடுக்கலாமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை வலிகாமம் வடக்கில் பொதுமக்களது வீடுகள் உடைக்கப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் இது தொடர்பில் அமெரிக்க துர்துவரிடம் எடுத்து கூறியுள்ள அதேவேளை கட்சி தலைவர் சம்பந்தனிடமும் ஜனாதிபதியுடன் பேசச்சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பினில் சம்பந்தன் ஜனாதிபதியுடன் பேசியிருப்பாரென நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.