யாழ்ப்பாணத்தின் சமர் என வர்ணிக்கப்படும் றோயல் விளையாட்டு கழகம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில்
யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 64 அணிகள் மோதிய இந்த சுற்றுப்போட்டியில் 8 அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.வடமராட்சியில் இருந்து சுமார் 30 அணிகள் பங்குபற்றியபோதும் வல்வை அணி மட்டுமே 8 அணிகளுள் ஒரு அணியாக தகுதி பெற்றுள்ளது.லீக் சுற்றில் வல்வை அணி ஏனைய 7 அணிகளுடனும் மோதவுள்ளது….
நாவாந்துறை சென்மேரிஸ்,குருநகர் பாடுமீன்,பாசையூர் சென்அன்ரனீஸ்,இளவாலை யங்ஹென்றிஸ்,மானிப்பாய் ரெட்றேஞ்சர்ஸ்,மயிலங்காடு ஞானமுருகன்,ஊரெழு றோயல் ஆகிய 7 அணிகளையும் லீக் சுற்றில் வல்வை அணி சந்திக்கவுள்ளது இந்நிலையில் இன்று நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டு கழகம் மோதியது, இதில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது .