பருத்தித்துறை YMCA (Young Men’s Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று(10-12) மாலை நடைபெற்றது.
இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் வல்வை அணித்தலைவர் செல்வன் ரசிகரன் 2 கோல்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து 2 வது பாதி ஆட்டத்தில் மிகச்சுறுப்புடன் விளையாடிய டயமன்ஸ் அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்ட நிலையில் நேரம் முடிவடைய தண்ட உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.வல்வை விளையாட்டு கழக கோல் காப்பாளரான ஜிவிந்தன் சிறந்த முறையில் பந்துகளை தடுத்து வல்வை விளையாட்டு கழகத்தின் வெற்றியினை உறுதிப்படுத்தினார்.