பருத்தித்துறை YMCAஅணுசரனையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று சமநிலையில்போட்டி முடிவடைய நடுவர்களினால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவு செய்யப்பட்டது.