ரோரண்டோ புளுஸ் உதைபந்தாட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றது!
07.04.2012 அன்று ரோரண்டோ நகரில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ரோரண்டோ புளுஸ் விளையாட்டுக் கழகம் சிறப்பாக விளையாடி இரணடாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
கால்இறுதி ஆட்டத்தில் பனால்டி உதைமூலம் இ.என்.ஏ அணியை வெற்றி கொண்டது. பின்னர் சீவேஸ் பி(கடல் அலைகள்) அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோரண்டோ புளுஸ் வீரர்கள், இடைவேளை வரை 1-3 என்ற கோல்கணக்கில் பின்தங்கியிருந்தாலும் இறுதியில் 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.
ரோரண்டோ புளுசுக்கும் சீவேஸ் ஏ(கடல் அலைகள்) அணிக்கு இடையிலான இறுதி ஆட்டத்தில் புளுஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதும், 2-6 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாக ரோரண்டோ புளுஸ் அணி விளையாடிய எந்தச் சுற்றுப்போடடியிலும் அரைஇறுதி வரை கூட முன்னேறாத புளுஸ் அணி இந்த வருடத்தில் முதலாவது சுற்றுப்போட்டியிலேயே இறுதி ஆட்டம் வரை முன்னேறியமை விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும், ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. கடந்த மார்கழி மாதத்தில் இருந்து வீரர்கள் எடுத்த கடுமையான பயிற்சியே இந்த முன்னேற்றத்திற்கு காரணமாகும். தொடர்ந்தும் கடுமையான பயிற்சியை வீரர்கள் தொடர்வார்களாயின் இந்த வருடம் பல வெற்றிகள் பெறலாம்.