வல்வைவாசமுடன் இங்கிலாந்து வல்வையர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பிரபாகரன்ஆண்டு – ஆண்டு60 திருவள்ளுவர்ஆண்டு- ஆண்டு2046
நாம் இங்கிலாந்து வல்வையர்கள் இங்கு வசிக்க வந்த காலம் தொடக்கம் 50 வல்வையர்களுடன் முட்டாசி அண்ணாக்கள் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட வல்வை நலன்விரும்பிகளின் செயல்பாடுகள் இன்று இங்கிலாந்தில் சுமார் 2000 அதிகமான வல்வையர்களுடன் இருக்கின்றோம்.
தற்போது மௌன காலத்தில் பிரபாகரனின் 60வது சஸ்ட்டி பூர்த்தி பெரு விழாவை கொண்டாட வேண்டிய கால கட்டத்தில் நிற்கின்றோம்.
ஜக்கிய இராச்சிய வல்வை நலன்புரிச்சங்கத்தின் வருடந்த பொதுக்கூட்டம் 19.01.2014 கூடி கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய இருக்கின்றோம்.
இவ்வாரம் எமது தூக்கத்தை தொலைத்து கதிகலங்கியிருக்கும் துயரமான இவ்வேளையில் நாம் உணர்வுபூர்வமானவர்களாக ஒன்று கூடி பல பாதைகளில் உண்மையாக பயணிக்க வேண்டியகால கட்டத்தில் வந்து நிற்கின்றோம்.
நாம் எமது குடும்பத்தில் மனவி மகள் சகோதரியின் செய்ல்பாடுகள் எப்படி முக்கியமானதோ அதே அளவுக்கு எம் நலன்புரிச்சங்கத்துக்கும் மகளிர் அணியின் செயல்பாடுகள் முக்கியம். கடந்த காலத்தில் பிரம்மாண்டமான மேடை விழாக்களையும் எமக்கு சொந்தமான வல்வை அரங்கு முயற்சியிலும் இடுபாடு கொண்டிருந்தோம்.
அன்று நாம் நாம் கட்டி வந்த காசை உழைக்க வேண்டிளவர்களாகவும். தொடர்கதையாக மனவி மக்கள் வந்த காசை உழைக்க வேண்டியவர்களாகவும் விதிவசப்பட்டோம். அத்தகைய ஒரு நிலையிலும் எமது சங்கத்தை பேணிக்காத்து விளையாட்டுத்துறையில் லண்டனில் எம் வீரத்தை தக்க வைத்துக் கொண்டது வரலாற்றில் இன்னும் நூறு வருடங்களுக்கு பிறகும் போசப்படும்.
நாம் எம் விழாக்களை சிறப்புச் செய்வதற்கு 2003ம் ஆண்டு விழாப்போல் வல்வை யூகே இசைக்குழு ஒன்று கண்டிப்பாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.
வல்வைச் சிறார்களில் இருந்து பிரபாகரன் காலத்துக்கு முந்தியவர்களின் காலத்தவர்கள் வரையும் பின்னல் அமைப்பு முறையில் பாடகர்களாக பாடகிளாக இணைந்து செயல்படுவோம். எமது சங்கத்தின் வருடந்த சாந்தா உறுப்பினர்களா திகளும் சிறப்பும் பெறுவோம்.
எமது இணையத்தளத்தில் வாரா வாரம் பாடல் நிகழ்ச்சிகள தொகுத்து வழங்குவதற்கு எம்மத்தியில் நிறையபாடக்கூடியவுர்கள் இருக்கின்றார்கள்.
இது போல் எமது இணைத்தளம் மூலம் நான்ஆட நீஆட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு இணையத்ள நிர்வாகமும் கலாச்சாரக் குழுவும் புரியபாதையில் பயணிக்க வேண்டும்.
நாம் கடந்த வருடம் அன்னபூரணியம்மாளின் பவளவிழா நிகழ்வுகளை ஆலோசித்த போது எமது கலாச்சரப் பொறுப்பாளர் ரிசி அவர்கள் நாம் பிரபாகரனின் 60வது பிறந்த நாளுக்கு 60 கிலோ கேக் செய்து வெட்ட வேண்டும் என்று இக்கால இளஞர்களின் சார்பில் தனது ஆசையை தெரிவித்து இருந்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
எனது 60வயதின் அனுபதொகுப்பின் எண்ணத்தில் 60பேர் 60 குடும்பம் இணைந்து ஓரே மேடையில் 60 கேக் வெட்டலாம். எமது நலன்புரிச்சங்த்துடன் 60 புதிய குடும்பத்தினர் இணைந்து செயல்படத் தொடங்குவார்கள்.
மேதகு பிரபாகரனின் 60 வது பிறந்த நாள் கேக் கட்டிங் செய்பவர்கள் தமது 5வருடங்களுக்கான அங்த்துவபணத்தை செலுத்தி தங்களினதும் வல்வையினதும் கௌரவத்தை நிலைநிறுத்திக்கொள்வார்கள்.
இது போன்று ஒரு சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் எமது ஊரவர்களுடன் உரையாடிபோது எமது சிவபுர விதியில் இரண்டு மரங்கிலும் நெட்டலிங்கம் மரம் நட்டால் நன்றாக இருக்கும் என்று தனது மண்வாசத்தை தெரியப்படுத்தியிருந்தார். இப்படி உங்களிடமும் மண் வாசங்கள் நிறை இருக்கின்றது. இங்கிலாந்தில் எமக்கு காரியாலயம் இருக்கின்றது. தினசரி கூடிக்கதைத்து வல்வையர் நாம் புதிய பாதையில்
19.01.2014 புதிய நிர்வாகிகள் தெரியும் கூட்டத்துக்க கௌரமாக குடும்பத்துடன் வந்து நாங்களாக விரும்பி புதிய பொறுப்புகளை ஏற்போம்.
நாம் பல பேர் கூடித்தான் பெரும் தேரை முதல் நகர்த்த முடியும் அதன் பிறகு நாம் கயிற்றை சும்மா தொட்டுக்கொண்டு வந்தால் போதுமானது.
இது எம் வாழ்க்கை தத்துவத்தக்க மிகவும் பொருத்தமானது.
இனிய மாமாச்சி
வல்வை நலன் புரிச்சங்கம் போசகர்.
18.01.2014