நம் இனம் ஊர் உணர்வுகள் நம் தகமைகள் திறமைகள் சிதைந்து போகமல் இருப்பதற்காக நாம் பல சந்தர்ப்பங்களில் ஒன்று கூடவேண்டிய காலத்தின் நியதிக்கு வந்தாகவேண்டியுள்ளளோம்.
ஏற்கனவே நம் விழாக்களில் நிறைய வல்வைப்பாட்டுக்காரர்களை சந்தித்து உள்ளோம். நம் ஒற்றுமையின் பலம் சிதைந்நு போகமாலும் நம் விழாக்களை சிறப்பிப்பதற்கும் எதிர்கால இளைய சமுதாயம் வல்வையர் நலன்புரிச்சங்கற்களுடன் சாமாந்தரமாக பயணிப்பதற்கு எம் மத்தியில் பிரபலமான இசைக்குழு தேவையாக இருக்கின்றது. வல்வையர்களின் அங்கத்துவம் லண்டன் வல்வையர்களின் எண்ணிக்கை கணிப்பு இவ்வருடம் பிரபாகரனின் 60 வது பிறந்த நாள் கொண்டாட்ங்கள் போன்ற தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு எம் மத்தியில் தோன்றும் புதிய இசைக்குழு வெற்றிப்பாலம் அமைக்கும்.
எம் நலன் புரிச்சங்த்தின் காரியாலத்தில் இசைக்குழு அமைப்பதில் பங்கு கொள்ள விரும்பும் பாடகர்கள் வாத்தியக் கலைஞர்கள் நடனக்கலைஞர்கள் தவறாது சமூகம் அளிக்கும்படி தாழ்மையுன் அறித்தருகின்றேன். லண்டன் மாநகருக்கு வெளியில் உள்ள கலைஞர்கள் எம் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாவிட்டல் எனது கணனி முகவரி கைபேசிகள் மூலம் தொடர் கொண்டு ஆசைகள் விருப்பங்களை தெரியப்படுத்தவும்.
எமது இணைத்தளத்தில் ஏற்கdவே வீடியோ பதிவேற்றும் மூன்று பகுதிகள் தயார்நிலையில் இருக்கின்றது.
வாரவாரம் எமது பாடல்கள் ஒரு தளத்திலும் சிறார்கள் முதல் பெரியவர்களின் நடன நிகழ்வுகள் ஒரு தளத்திலும் பதிவேற்றம் செய்யலாம். இவ் இருபகுதிளினுடாக நம் உலக வல்வையர்களையும் இணைத்துக் கொள்வோம்.
இப்படி நாம் வல்வையர்கள் பயணிக்க வேண்டி பாதை மிகவும் நீளமானது.
வல்வை வாசத்துடன் வாருங்கள் புதிய இசைக்குழு பற்றிய புரிதல் கொள்வோம்.
வல்வை மாமாச்சி
போசகர் – தற்காலிக தலைவர் நலன்புரிச்சங்கம் இங்கிலாந்து.
muthumary@hotmail.co.uk
07707 464 887