மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்து போன பிரிட்டன்

மெட்ரோ ரயில்வே ஊழியர்கள்  போராட்டத்தால் ஸ்தம்பித்து போன பிரிட்டன்

பிரிட்டனின் தலைநகர் லண்டனில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றது.

150 ஆண்டு பழமையான மெட்ரோ ரயிலில் தினசரி மூன்று மில்லியன் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

ஆயினும் பெருகி வரும் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும்விதமாக ரெயில்வே நிர்வாகம் முதலில் சுரங்க ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் அலுவலகங்களை மூட முடிவு செய்ததுள்ளது, இதனால் அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் நேற்று 48 மணிநேர ஸ்டிரைக்கினை தொடங்கினர்.

இவர்களுக்கு ஆதவாக பல்வேறு ரயில்வேயின் பல்வேறு யூனியன் அமைப்புகளும் இறங்கியுள்ளன.

இதனால் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இதனையடுத்து லண்டன் மாநகர நிர்வாகம் கூடுதல் பேருந்துகளை இயக்கி நிலைமையை சமாளித்து வருகிறது.

இரண்டாம் கட்டமாக வரும் 11 மற்றும் 14ம் திகதிகளில் ஸ்டிரைக்கினை தொடர ரயில் யூனியன் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

ஊழியர்கள் ஸ்டிரைக்கினை கைவிட வேண்டும் என டுவிட்டரில் பிரதமர் டேவிட் கமரூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.