பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால், பருத்தித்துறை லீக்கின் சிரேஷ்ட உறுப்பினர்களால் நடாத்தப்பட்டிருந்த 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்துப் போட்டியில் வல்வை அணி தோல்வியடைந்துள்ளது.
இன்று காலையிலிருந்து வதிரி டையமண்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், காலை நடைபெற்ற போட்டியில் வல்வை அணி கலட்டி அணியை எதிர்த்து மோதியது. இதில் கலட்டி அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மாலை நடைபெற்ற ஆட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை அணி மோதியது. போட்டியில் முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் பெற்ற நிலையில், கோல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வல்வை அணி வெளியேறியுள்ளது.