பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் ஸ்டெனோ மிர்சா(18), ஹசன் அப்துல்லா(33), ரெனேடோ பலோக்(18), ஜன் காண்ட்ராக்(17) மற்றும் ராபர்ட்(14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 12 முதல் 14 வயது மதிக்கத்தக்க 5 சிறுமிகளை கடத்தி கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
இதன்பின் பொலிசார் நடத்திய விசாரணையில், மேலும் பல சிறுமிகளை ஏமாற்றி மிக கொடூரமாக கற்பழித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், 5 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, தலா 54 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.