ஆஸ்திரேலியாவில் ஒர் பெரிய முதலையை விழுங்க முயன்ற மலைப்பாம்புக்கும், அந்த முதலைக்குமான போராட்டம் ஒன்று பல மணி நேரம் நடந்துள்ளது.
குயின்ஸ்லாண்டின் ஒரு வாவியோரமாக 3 மீட்டர்கள் நீளமான அந்த மலைப்பாம்பு அந்த முதலையை முழுதாக விழுங்குவதற்காக பல மணிநேரம் போராடியுள்ளது.
பலர் அந்தக் காட்சியைக் கூடிப் பார்த்திருக்கிறார்கள்.
அந்த முதலையைக் கடிப்பதற்கு முன்னதாக அந்தப் பாம்பு முதலையை சுற்றுவளைத்து, அதனுடன் கட்டிப் புரண்டதை ஒரு தொலைபேசி கமெராவில் பிடிக்கப்பட்ட படத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது.
இறுதியாக அது எப்படியோ அதனை வெற்றிகரமாக விழுங்கிவிட்டது.
அந்த மலைப்பாம்பின் வயிற்றுப் பகுதியில் அந்த முதலையின் உருவம் பிதுங்கிக் கொண்டிருப்பதை பார்க்கக்கூடியதாக இருந்தது.