வல்வை வி. க 2014 , உதைபந்தாட்டப் போட்டியின் கால் இறுதியாட்டங்களின் இறுதி ஆட்டங்கள் இன்று பிற்பகல் நடைபெற்றன.

இன்றைய முதலாவது ஆட்டத்தில் வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டாவது ஆட்டத்தில் கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டிகள் யாவும் வல்வை வேவில் பகுதியில் அமைந்துள்ள ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.