பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டு கழகம் நடாத்திய 7 நபர் கொண்ட விலகல் முறையிலான உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியும் ,பரிசளிப்பு நிகழ்வும் வல்வை ரெயின்போ விளையாட்டு கழக மைதானத்தில் 4 மணியளவில் வல்வை விளையாட்டு கழக தலைவர் முரளி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் வதிரி பொம்மேர்ஸ் வி.கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் வி.க மோதியது.இவ் ஆட்டத்தில் 3:0 என்ற கோல்கணக்கில் வாதி பொம்மேர்ஸ் வி.க மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
இறுதிப்போட்டிக்கான தெரிவில் பலாலி விண்மீன் வி.க த்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் வி.க மோதியது இவ் ஆட்டத்தில் 2:1 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் வி.க வெற்றிக் கிண்ணத்தினை தனதாக்கியது.
தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது,ஏராளமான ரசிகர்கள் மைதானத்தை சூழ்ந்திருந்து போட்டிகளை பார்த்தனர்.