வடமராட்சி பிரதேசத்தில் உதைபந்தாட்ட கழகங்களின் அதிகரிப்பை தொடர்ந்து பருத்தித்துறை லீக்கிற்கு மேலதிகமாக வடமராட்சி உதைபந்தாட்ட லீக் எனும் பெயரிலான புதிய உதைபந்தாட்ட லீக்கின் அங்குரார்ப்பண நிகழ்வு 2014/02/28ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு அல்வாய் தெற்கு கிராம அலுவலர் பணிமனையில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் கௌரவ றஞ்சித் றொட்றிகோ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது, இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் உபாலி ஹேவகே அவர்களும் நிறைவேற்று பணிப்பாளர் திரு.அனுரா டீ சில்வா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் ஆளுகை பிரிவின் உதைபந்தாட்ட கழகங்களின் தலைவர்,செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டபடுகின்றீர்கள்.