வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும் கனடாவில் வசித்துவருபவருமான ரவி இந்திரனின் கவிதைத்தொகுப்பான ‘கண்ணீர்வெடிகள்’ கனடாவில் மே 6 (ஞாயிற்றுகிழமை) அன்று வெளியிடப்படஉள்ளது.
அழகாக கவிதைஎழுதி அதற்குள் ஆழமான தேசியப்பற்றையும் மண்மீதான காதலையும் வெளிப்படுத்திய ரவி இந்திரனின் கவிதைவெளியீடு வெற்றிகரமாக அமைய எமது இணையம் வாழ்த்துகின்றது.
இந்த கவிதைதொகுப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பாவலர் அறிவுமதியும் அணிந்துரை வழங்கிஉள்ளார்கள்.. இயக்குனர் சுப.செல்வம் அவர்களும் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்களும் வாழ்த்துரையினை வழங்கியிருக்கிறார்கள்;. ஈழத்தில் சிந்தப்பட்ட கண்ணீருக்கும் இரத்தத்திற்கும் இக்கவிதைத் தொகுப்பினை ரவி இந்திரன் காணிக்கையாக்கி உள்ளார்.