இத்தாலிய தொலைக்காட்சியான TG3இல் இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனைகள் தொடர்பாக ஒரு விவரணம் வெளியாகியிருந்தது.
இலங்கைத்தீவின் ஆரம்பத்தில் இருந்து, அதாவது அன்னிய ஆக்கிரமிப்பு தொடங்கி, சிறீலங்காவின் சுதந்திரத்தின் பின்னரும், தற்போதும், உள்ள பிரச்சனைகளை எடுத்துக்கூறியுள்ளது.
விடுதலைப்புலிகளின் பிறப்பு முதல் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளையும் இவ்விவரணம் கூறுகின்றது.