பிரான்சின் புதிய அதிபராக சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரான்கோய்ஸ் ஹாலண்ட் (57) நேற்று (15.05.2012)பதவியேற்றார். பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவில் அப்போதைய அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஹாலண்டுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெரும்பான்மை வாக்கு பெற்று ஹாலண்ட் வெற்றி பெற்றார். இதையடுத்து, எலைசி மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் பிரான்ஸ் அதிபராக அவர் பொறுப்பேற்றார். இவ்விழாவில் பங்கேற்ற முன்னாள் அதிபர் சர்கோசி நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை ஹாலண்டிடம் எடுத்துரைத்தார்.
பதவியேற்ற அடுத்த சில மணி நேரத்தில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக, முதல் அரசு முறை பயணமாக ஜெர்மனிக்கு ஹாலண்ட் சென்றார். இதை தொடர்ந்து, வரும் வெள்ளியன்று அமெரிக்கா செல்லும் ஹாலண்ட், அந்நாட்டு அதிபர் பராக் ஓபாமாவை சந்திக்கிறார். பின்னர் ஜி,8 மற்றும் நேட்டோ மாநாட்டிலும் பங்கேற்கிறார்.