நுவரேலியாவில் இருந்து பதுளைக்கு போகும் பாதையில் Hakgala Botanical Garden தாவரவியல்பூங்காவுக்கு அருகில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.இந்த கோவிலை அந்த நேரம் நுவரேலியாவில் ஓவசியராக இருந்த திரு.கு.ச.அருளம்பலம் (அருளம்பலம் ஓவசியர்) கட்டியிருக்கிறார் என்பது நம் எல்லோருக்கும் பெருமை தரத்தக்க தகவல் ஆகும்.
இராமாயண இதிகாசத்தில் சீதையை தடுத்து வைத்திருந்த இடமாக கூறப்பட்ட இடமாக இது கருதப்படுகின்றது.
இந்த கோவில் அமைந்திருக்கும் இடம் அற்புதமான ரம்மியமான இயற்கை அழகு நிறைந்ததாக இருக்கிறது.இந்த கோவிலை ஒட்டியபடியே ஒரு சிறு அருவி எந்த நேரமும் சலசலத்து ஓடிக்கொண்டே இருக்கிறது.இதனை மூலிகை அருவி என்றும் சொல்வார்கள்.
இந்த கோவிலின் வரலாறு மற்றும் இதனை கட்டிய அருளம்பலம்ஓவசியர் அவர்களின் புகைப்படம் என்பன வல்வையர் யாரிடமாவது இருந்தால் தயவு செய்து எமது இணைய அஞ்சல் முகவரியான vvtuk26@gmail.com என்பதற்கு அனுப்பினால் மேலும் நிறைந்த தகவலை வழங்க சாத்தியமாக இருக்கும்.