பாராட்டுகின்றோம்.
சிங்களஇனவெறிஅரசின் பாரபட்சங்கள்,அடக்குமுறைகள்,பாகுபாடுகள் மற்றும் பேரினவாத செயற்பாடுகள்
நிறைந்தஒரு சூழலில் தமது ஆற்றலாலும்,அறிவுத்தேடலாலும்,கல்வியின் மீது கொண்ட பற்றினாலும்
இடைவிடாது படித்து உயர்தரபரீட்சையில் இலங்கையிலேயே முதலாவதாக வந்த வல்வெட்டித்துறை கொம்மந்துறையை சேர்ந்தவரும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன்கல்லூரி மாணவருமாகி செல்வன் கமலக்கண்ணன் கமலவாசனுக்கும் மற்றும் சிறப்புச்சித்தி அடைந்த அனைத்து தமிழ்மாணவர்களுக்கும் vvtuk.com இணையம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறது.
ஆற்றலும் அறிவும் மிகுந்த ஒரு சமூகமாக தமிழினம் மிளிரவேண்டும் என்றால் இத்தகைய சாதனைகள் மேலும் மேலும் தொடரவேண்டும்.