வல்வெட்டித்துறை நடராஜாவீதியை சேர்ந்தவரும் சிவகணேசனின் மகனுமான செல்வன் தர்சன் சிவகணேசன் தமிழ்நாடு உதைபந்தாட்டஅணியில் தெரிவாகி இரண்டு போட்டிகள் விளையாடியுள்ளார்.
ராமநாதபுரம் மண்டபத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விகற்றும்வரும் வேளையில் மாவட்டரீதியான போட்டிகளில் தர்சன் விளையாடி தனது பாடசாலைக்கு பெரு வெற்றிகளை ஈட்டித்தந்திருக்கிறார்.
அத்துடன் இவரின் உதைபந்தாட்ட வேகம் நுட்பமான விளையாட்டு என்பனவற்றை அறிந்த தமிழ்நாடு உதைபந்தாட்ட தெரிவுக்குழுவினர் இவரை தமிழ்நாடு உதைபந்தாட்ட அணியில் இணைத்துள்ளனர்.
தமிழ்நாடு உதைபந்தாட்ட அணியில் தர்சன் இரண்டு போட்டிகள் விளையாடிஇருக்கிறார்.
வல்வையை சேர்ந்த ஒரு இளைஞன் அகதியாக தமிழ்நாடு சென்று அங்குள்ள முகாமில் இருந்து பின்னர் அந்த மாநில உதைபந்தாட்டஅணியில் சேர்ந்திருந்தார் என்பது எம் எல்லோருக்கும் பெருமையான விடயம்.
இப்போது குடியுரிமை போன்ற காரணங்களால் இவர் அந்த அணியில் இல்லாது விட்டாலும்கூட பத்துகோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தின் உதைபந்தாட்டஅணியில் இடம் பெற்று இருந்ததே பெரிய சாதனைதான்.