மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள சிறீலங்கா கடற்படையினரின் காவலரனுக்கு முன் வபோதிப பெண் ஒருவருடைய சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபத்தாய் மன்னார் பெரிய கடையைச் சேர்ந்த செபமாலை றெசினா (வயது-76) என அவரது மகன் அடையாளம் காட்டியுள்ளார்.
குறித்த வாயொதிப தாய் சற்று மண நிலை பாதிப்படைந்துள்ளதாகவும் மன்னார் உப்பள கடற்கரை வீதியூடாக வீட்டிற்கு வரும் போது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என அவரது மகன் தெரிவித்தார்.
இந்த நிலையில் மன்னார் நீதவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரைணகளை மேற்கொண்ட போது குறித்த வாயோதிப தாயின் மகன் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் குறித்த பெண்ணின் தலைப்பகுதியில் இரத்தக்காயம் காணப்பட்டுள்ளது.
சடலத்தை பார்வையிட்ட நீதவான் சடலத்தை மன்னார் வைத்திய சலையில் ஒப்படைத்து சடலப்பரிசோதனையின் பின் உரவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
நன்றி: சங்கதி24 இணையம்