எங்கள் மக்களை கொன்றுகுவித்த இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்ச 06.06.2012அன்று
காலை 6மணிக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகத்தில் உரையாற்ற உள்ளார்.
அதனை நிறுத்தும்படி கோரி 01.06.2012(வெள்ளி) அன்று மாலை 4மணிக்கு பொதுநலவாய செயலகமான
Marlborough House (London)ன் முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இடம்: Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX
நேரம்: Friday 1st of June 4.00pm-7.00pm
தமிழ்மக்களை கொன்றுகுவித்த கொலைகார கரங்களின் குருதி இன்னும் காயவில்லை.தினம் தினம் தமிழர்தாயகம் எங்கும் கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது.
இத்தகைய இனப்படுகொலை குற்றவாளியை லண்டனில் உரையாற்ற அனுமதிக்ககூடாது என்று பொதுநலவாயஅமைப்பை கோரும் இந்த போராட்டத்துக்கு அனைவரையும் அழைக்கிறோம்.
எழுச்சியுடன் ஒன்று கூடுவோம்.!இனப்படுகொலை குற்றவாளிக்கு எம் எதிர்ப்பை காட்டுவோம்.!!
விடுதலை கிட்டும்வரை ஓயமாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!!