தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

வடமராட்சியில் உள்ள விளையாட்டு மைதானங்‌களில் ஒரு தரமான மைதானமாகவும்,அனைத்துப் போட்டிகளையும் நடாத்துவதற்கு ஏற்ப எல்லா வசதிகளும் கொண்டதாகவும் எமது தீருவில் விளையாட்டுக் கழக மைதானம் அமையவேண்டும் என்னும் நோக்கத்தோடு, தற்போது புனரமைப்பு வேலைகள் எம்மால் தொடங்கப் பட்டுள்ளன.
முதல் கட்டமாக மைதானத்தின் சுற்றுப் புற எல்லைகள் சரிவர அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.மைதானத்தைச் சுற்றிவர தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பின்னர்,
பிரதான மைதானம் சமநிலைப்படுத்தப்பட்டு, மைதானம் முழுவதும் புல் தரையாக (Grass Field) மாற்றப்படவுள்ளது.
இதில் கிரிக்கெட் தளமும் (cricket pitch) அமையவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மின்னொளியில் போட்டிகளையும் நடாத்துவதற்கு வசதியாக, மைதானத்தின் நான்கு மூலையிலும் மிகவும் பிரகாசமான ஒளி தரும் மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

எமது தீருவில் விளையாட்டுக் கழக அனைத்து உறுப்பினர்களின் பெரும் பங்களிப்புடன் ஆரம்பமாகியுள்ள இந்தப் புனரமைப்பு வேலைத்திட்டம் மிக விரைவில் செய்து முடிக்கப்படவுள்ளது.

நன்றி,
தீருவில் வி.கழகம்.

Leave a Reply

Your email address will not be published.