இன்று நடைபெற்ற TSSA உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுசின் 6 அணிகள் பங்குபற்றின (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

இன்று நடைபெற்ற TSSA உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுசின் 6 அணிகள் பங்குபற்றின (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

வல்வை சிதம்பராக் கல்லூரியின் (புளூஸ் அணிகள்) வெற்றியைத் தவறவிட்டன.

 

சற்றும் எதிர்பாராத விதமாக எமது புளூஸ் அணியின்  Adult Team தமது திறமையான விளையாட்டுகளின் மூலம் கால் இறுதிவரை முன்னேறி இறுதியில் (Penalty Kick)தண்ட உதைகளில் கொக்குவில் இந்துக் கல்லூரியிடம் தோல்வியை தழுவிக்கொண்டது.

எமது கடந்த காலங்களில் பல வெற்றிகளை தனதாக்கி எமக்கு பெருமைகளைத் தேடித்தந்த விளையாட்டு வீரர்களைக் கொண்டு தற்போது விளையாடும் Over40  எனும் மற்றைய  அணியும் கூட அரையிறுதி வரை முன்னேறி வந்து,இறுதியில்  திருகோணமலை சென்.ஜோஸேப் கல்லூரி அணியிடம் தோல்வியைத் தழுவியது.

அத்தோடு நாம் மிகவும் நம்பிக்கையுடன் எதிபார்த்த கடந்த ஆண்டு சாம்பியன் கிண்ணத்தை வென்றுவந்த Under12, Under14 அணிகள் கூட இன்றைய ஆட்டங்களில் தோல்வியைக் கண்டன.

Under16 அணியினர் School Exam காரணமாக இன்றைய போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. Under19 அணியினர் கூட நன்றாக விளையாடினார்கள்,ஆனால் அவர்களும் கால் இறுதி வரைதான் முன்னேற முடிந்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published.