தமிழ்நாடு பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வல்வையை சேர்ந்த ஜெயராசா வசந்தன் எனும் மாணவன் மொத்தபுள்ளிகளான 500ல் 439 எடுத்து சிறப்பு சித்தி அடைந்துள்ளார்.
இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தி அடைந்திருப்பது எமது சமூகம் தனது கல்வியை எத்தனை தடைகளுக்குள்ளாகவும் தொடர்ந்தபடியே இருக்கும் என்பதை நிரூபணம் செய்கிறது.
எம் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய மாணவ மாணவிகளுக்கு எமது இணையம் தனது வாழ்த்துகளை வழங்குவதில் பெருமை கொள்கின்றது.
அத்துடன் வல்வை நலன்புரிச்சங்க இங்கிலாந்து கிளையின் நிர்வாகமும் இங்கிலாந்து வாழ் வல்வை மக்களின் சார்பில் தமது வாழ்த்துகளை அம் மாணவ மாணவிகளுக்கு தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது.