லீக் வெற்றிக்கிண்ண போட்டியில் முதலாம் சுற்றுடன் துரதிஷ்டவசமாக புளூஸ் வெளியேறியுள்ளது
பிரித்தானிய தமிழ் லீக் நடத்தும் வெற்றிக் கிண்ணத்துக்கான போட்டியில் முதலாம் சுற்றில் இன்று (13 /11 /11) கிங்ஸ்டன் அணியை எதிர்த்து மோதிய வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் 3 -2 என்ற கோல்களின்அடைப்படையில் தோல்வியை தழுவி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
விறுவிறுப்பாக நடந்த இன்றைய போட்டியில் இரு தரப்பும் வெற்றிபெற்றே ஆகவேண்டுமென்று மோதின.போட்டி ஆரம்பமானவுடனே புளூஸ் அணி ஒரு கோலை போட்டது. ஆனால் அதற்கு பதிலாக கிங்ஸ்டன்அணி இரண்டு கோல்களை போட்டு இடைவேளையில் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில்முன்னிலையில் நின்றது.
எனிலும் புளூஸ் அணி இடைவேளைக்கு பின் மிக சிறப்பாக விளையாடி ஒருகோலை போட்டு 2 -2 என்ற நிலைக்கு வந்து மிகவும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தவேளைஎதிர்பாராத விதமாக கிங்ஸ்டன் அணி ஒரு கோலை போட்டது.
இதன் பின் புளூஸ் அணி தனது முழுமையான பலத்தையும் உபயோகித்து கோல்களைபோடவேண்டுமென்று முயன்றது. கடைசி பத்து நிமிடங்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களைஉருவாக்கியும் வெற்றிபெறமுடியாமல் போனது துரதிஸ்டவசமாகும்.
எனிலும் வீரர்கள் சோர்வடையாது மீண்டும் லீக் போட்டிகளில் வெற்றிப்பாதைக்கு அணியைஎடுத்துச்செல்வோம் என்று உறுதியாய் உள்ளனர்.
எதிர்வரும் இரண்டு வாரங்கள் போட்டிகள்நடைபெறாது. அதைனை தொடர்ந்து புளூஸ் அணி ஈஸ்ட் லண்டன் எலைட் அணியை எதிர்த்துமோதுகின்றது.
செய்திகள்: ஆதவன்