வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் பாலஸ்த்தாபனம்செய்யப்பட்டு, புனருத்தான திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 29.06.2014 (ஆனி – 15) எண்ணெய்க்காப்பு நடைபெற்று, 30.06.2014 ( ஆனி 16) அன்று மஹாகும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளதனால், விநாயகர் அடியார்களிடமிருந்து திருப்பணி வேலைகளுக்கான நிதி உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
உத்தேசிக்கப்பட்டுள்ள செலவு விபரம்.
வர்ணப்பூச்சு வகைகள் மற்றும் கூலி ரூபா 25 இலட்சம்.
மகாகும்பாபிஷேக பொருட்கள், குருக்கள்மார் தெட்சணைகள் மற்றும் மங்களவாத்திய செலவுகள் ரூபா 30 இலட்சம்.
தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணிவேலைகள்.
ம.சாம்பசிவம் வழித்தோன்றல்களாகிய சேவற்கொடியோன் (மாஸ்ரர்) பிள்ளைகள் குடும்பத்தினரது நிதிப்பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள யாகசாலையும் அதற்கு மேலான மாடங்களும.
பூலோக இராசலிங்கம் பெண் ஸ்ரீஞானேஸ்வரியும் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடன் கட்டப்பட்
திரு.செ.காஞ்சிமாவடிவேல் அவர்களின் நிதிப்பங்கணிப்புடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ளநீர்த்தாங்கி.
திரு.தண்டபாணிகதேசிகர் மாதவன் அவர்களின் நிதிப்பங்கணிப்புடன் புதிதாகச்செய்யப்பட்டுவரும் கோபுரவாசல்க் கதவு.
திரு.இராமநாதன் மேத்திரியார் குடும்பம், திரு.சூரியமூர்த்தி பெண் சுகுணா பிள்ளைகள்,மற்றும் திரு.மௌ.செல்வகுரு ஞாபகார்த்தமாக அவர்தம் மனைவி ஆகியோரதுநிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் மேற்குப்புற அலங்கார சிற்பங்களுடன்கூடியமண்டபம்.வர்ணப்பூச்சு வேலைகள்.