வருகின்ற மாதம் (06.07.2014) ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரம் மக்கள் கூடப்போகின்ற ஒரு பெரும் விழாவாக அமைய இருக்கின்ற கோடைவிழாவின் சிறப்பம்சங்களில் மிகமுக்கியமானது வல்வையின் பாரம்பரிய முறையிலான உணவுத்தயாரிப்பும் சுவையும்தான். அதற்கான முக்கிய வேலைகள் ஒன்றான ரொட்டி வீசும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மற்றும் திங்கள் மாலை நேரத்திலும் பணிகள் நடைபெறும். எனவே கடந்த வருடம்போல் அனைத்து வல்வை நலன்விரும்பிகளும் வருகை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திகதிகள் : 07/06/2014, 08/06/2014, 09/06/2014
நேரம் : 07/06/2014 சனிக்கிழமை காலை 8.00 முதல் இரவு 11:00 வரை
08/06/2014 ஞாயிற்றுக்கிழமை காலை 800 முதல் இரவு 11:00 வரை
09/06/2014 திங்கக்கிழமை மாலை 4.00 முதல் இரவு 11.00 வரை
இடம் : 109 VICTORIA ROAD
MITCHAM
CR4 3JD
வல்வை உணவகக்குழு ,
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)